கவின், நயன்தாரா நடிக்கும் புதிய படத்தில் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.நடிகர் கவின் டாடா படத்திற்கு பிறகு ஸ்டார் திரைப்படத்தில் நடித்திருந்தார். இந்த படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதைத்தொடர்ந்து நடிகர் கவின் மாஸ்க், பிளடி பெக்கர், கிஸ் போன்ற பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். இந்நிலையில் நடிகர் கவின், விஷ்ணு எடாவன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தை செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனத்தின் சார்பில் லலித் குமார் தயாரிக்கப் போவதாக சொல்லப்படுகிறது. அதே சமயம் இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக நடிகை நயன்தாரா நடிக்க இருக்கிறார் என்று ஏற்கனவே தகவல் வெளியானது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில் இந்த படம் சம்பந்தமான புதிய அப்டேட் கிடைத்துள்ளது. அதாவது இந்த படத்தில் இளைஞன் ஒருவன் (கவின்) அவனைவிட மூத்த வயது பெண்ணை ( நயன்தாரா) காதலிப்பது தான் படத்தின் கதையாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது. அந்த வகையில் இந்த படம் முழுக்க முழுக்க ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாக இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் படம் தொடர்பான அடுத்தடுத்த அப்டேட்டுகள் விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.