கவின் நடிப்பில் உருவாகியுள்ள ஸ்டார் திரைப்படத்திலிருந்து புகைப்பட ஆல்பம் வீடியோ வெளியாகியுள்ளது.
கோலிவுட்டில் வளர்ந்து வரும் நாயகன்களில் ஒருவர் கவின். பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான இவர் லிஃப்ட் படத்தின் மூலம் நாயகனாக அறிமுகமானார். கவின் நடிப்பில் இறுதியாக வெளியான டாடா திரைப்படம் எதிர்பார்த்ததை விட பெரும் வரவேற்பை பெற்றது. அப்பா மகன், இடையேயான உறவை போற்றிய இத்திரைப்படம் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. டாடா படத்தின் வெற்றியைத் தொடர்ந்து கவின் நடித்து வரும் திரைப்படம் ஸ்டார்.
ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் இந்த படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார்.கே எழிலரசு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இத்திரைப்படம் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 9-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.
இந்நிலையில், படத்தின் போட்டோ ஆல்பம் வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. கல்லூரி காதல் கதையாக உருவாகும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரெய்ட்டி முகுந்தன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.