நெல்சன் தயாரிப்பில் கவின் நடிக்கும் ப்ளடி பெக்கர் படத்தின் டீசர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இயக்குனர் நெல்சன் தமிழ் சினிமாவில் தற்போது முக்கியமான இயக்குனராக உருவெடுத்துள்ளார். இவர் நயன்தாரா நடிப்பில் வெளியான கோலமாவு கோகிலா என்ற திரைப்படத்தின் மூலம் திரைத்துறையில் இயக்குனராக அறிமுகமானவர். அதைத்தொடர்ந்து டாக்டர் தமிழ் திரைப்படத்தையும் இயக்கி வெற்றி கண்டார். இருப்பினும் இவரது இயக்கத்தில் வெளியான பீஸ்ட் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. எனவே ரஜினிக்காக தரமான ஸ்கிரிப்ட்டை தயார் செய்து ஜெயிலர் திரைப்படத்தின் மூலம் கம்பேக் கொடுத்தார் நெல்சன். அடுத்தது ஜெயிலர் 2 திரைப்படத்தை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் தயாரிப்பாளராகவும் மாறியுள்ள நெல்சன் தனது பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் ப்ளடி பெக்கர் எனும் திரைப்படத்தை தயாரித்துள்ளார். இந்த படத்தை நெல்சனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிவபாலன் இயக்க நடிகர் கவின் ஹீரோவாக நடிக்கிறார். ஜென் மார்ட்டின் இதற்கு இசையமைக்க சுஜித் சாரங் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது. அதே சமயம் இந்த படம் வருகின்ற அக்டோபர் 31 தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து முதல் பாடலை படக்குழு வெளியிட்டது. இந்நிலையில் இந்த படத்தின் டீசர் வருகின்ற அக்டோபர் 7ஆம் தேதி மாலை 6 மணி அளவில் வெளியாகும் என புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டு படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.