நடிகர் கவின் விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதன் பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தனக்கென ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்தார். அதைத்தொடர்ந்து லிப்ட் படத்தில் நடித்து பெயர் பெற்ற கவினுக்கு டாடா திரைப்படம் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதைத் தொடர்ந்து பல பட வாய்ப்புகள் கவினை தேடி வருகின்றன. அதன்படி மாஸ்க், கிஸ் என பல படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அடுத்ததாக நயன்தாராவுடன் இணைந்து புதிய படம் ஒன்றிலும் நடிக்க இருக்கிறார் கவின்.
இதற்கிடையில் இவர் பிளடி பெக்கர் எனும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். இந்த படத்தை ஜெயிலர் படத்தை இயக்கி பிரபலமான நெல்சன் திலீப்குமார் தனது ஃபிலாமெண்ட் நிறுவனத்தின் மூலம் தயாரித்துள்ளார். இந்த படத்தை நெல்சனிடம் உதவியாளராக பணிபுரிந்த சிவபாலன் இயக்கியுள்ளார். ஜென் மார்ட்டின் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இந்த படத்தில் கவின் முற்றிலும் மாறுபட்ட தோற்றத்தில் நடித்திருக்கிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக இந்த படத்தில் அறிவிப்பு வீடியோ வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது. அதேசமயம் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே முடிவடைந்து படமானது வருகின்ற ஆகஸ்ட் மாதம் 2ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவலின்படி இந்த படம் 2024 செப்டம்பர் 27ஆம் தேதிக்கு தள்ளிப் போவதாக தெரியவந்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு படக்குழுவினர் சார்பில் விரைவில் வெளியிடப்படும் என்று நம்பப்படுகிறது
- Advertisement -