கவின் நடிப்பில் உருவாகியுள்ள கிஸ் படத்தின் ரிலீஸ் தேதி குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி என்ற மெகா தொடரின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் கவின். அதை தொடர்ந்து இவர் சில நிகழ்ச்சிகளில் தொகுப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெயரையும் புகழையும் பெற்றார். அதே சமயம் ஹீரோவாகவும் அறிமுகமான இவர், லிப்ட், டாடா போன்ற வெற்றி படங்களை கொடுத்துள்ளார். தற்போது இவர், மாஸ்க் எனும் திரைப்படத்தில் நடிக்கிறார். இது தவிர நயன்தாராவுடன் இணைந்த புதிய படத்தில் நடித்து வருகிறார் கவின். இதற்கிடையில் இவர், நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கத்தில் கிஸ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக ப்ரீத்தி அஸ்ரானி நடித்திருக்கிறார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க ஜென் மார்ட்டின் இதற்கு இசையமைத்திருக்கிறார். ஹரிஷ் கண்ணன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. இதற்கிடையில் இந்த படத்தில் இருந்து டீசரும், திருடி எனும் முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. மேலும் சமீபத்தில் இந்த படம் 2025 ஜூலை மாதத்தில் திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இப்படம் ஜூலை 11ஆம் தேதி திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளதாக தெரியவந்திருக்கிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.