Homeசெய்திகள்சினிமாகவின் நடிப்பில் உருவாகும் ஸ்டார்..... இந்த தேதியில் தான் ரிலீஸா?

கவின் நடிப்பில் உருவாகும் ஸ்டார்….. இந்த தேதியில் தான் ரிலீஸா?

-

நடிகர் கவின் சின்னத்திரையில் தனது வாழ்க்கையை தொடங்கி வெள்ளித்திரைக்கு பயணம் செய்து ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்துள்ளார். கவின் நடிப்பில் உருவாகும் ஸ்டார்..... இந்த தேதியில் தான் ரிலீஸா?இவர் தற்போது பல படங்களில் நடித்து வருகிறார். ஏற்கனவே கவின் நடிப்பில் வெளியான லிஃப்ட், டாடா போன்ற படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதைத் தொடர்ந்து டான்ஸ் மாஸ்டர் சதீஷ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார் கவின். அதே சமயம் ப்யார் பிரேமா காதல் பட இயக்குனர் இளன் இயக்கத்தில் ஸ்டார் படத்தில் நடித்து வருகிறார். படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து டப்பிங் பணிகளும் முடிவடைந்தன. ஏற்கனவே இந்த படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வரும் நிலையில் படத்தின் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த படம் 2024 மே 10ஆம் தேதி வெளியாகும் என்று தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. கவின் நடிப்பில் உருவாகும் ஸ்டார்..... இந்த தேதியில் தான் ரிலீஸா?எனினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது. மேலும் இந்த படத்தில் கவின் உடன் இணைந்து ஆதிதி பொஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இந்த படத்தை ரைஸ் ஈஸ்ட் என்டர்டைன்மென்ட் நிறுவனம் தயாரிக்க யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைத்துள்ளார். எழில் அரசு ஒளிப்பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ