spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகயல் ஆனந்தி நடிக்கும் 'ஒயிட் ரோஸ்' படத்தின் டிரைலர் வெளியீடு!

கயல் ஆனந்தி நடிக்கும் ‘ஒயிட் ரோஸ்’ படத்தின் டிரைலர் வெளியீடு!

-

- Advertisement -

கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகும் ஒயிட் ரோஸ் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.கயல் ஆனந்தி நடிக்கும் 'ஒயிட் ரோஸ்' படத்தின் டிரைலர் வெளியீடு!

கயல் என்ற படத்தின் மூலம் பிரபலமாகி திரிஷா இல்லனா நயன்தாரா, பரியேறும் பெருமாள் உள்ளிட்ட பல படங்களில் நடித்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தவர் கயல் ஆனந்தி. இவர் சமீப காலமாக கதாநாயகிக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். அந்த வகையில் கடைசியாக கயல் ஆனந்தி நடிப்பில் மங்கை திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனங்களை பெற்றது. அதேசமயம் கயல் ஆனந்தி ஒயிட் ரோஸ் எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். சைக்காலஜிக்கல் திரில்லர் கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படத்தில் ஆர் கே சுரேஷ் வில்லனாக நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் விடிவி கணேஷ், சசிலயா ராமநாதன், பேபி நக்ஷத்ரா, வர்ஷினி, ஹசின் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். பூம்பாறை முருகன் புரொடக்ஷன் நிறுவனம் இந்த படத்தை தயாரித்துள்ளது. எம் குமார் இதற்கு இசையமைத்துள்ளார்.

we-r-hiring

படத்தில் ஒளிப்பதிவு பணிகளை வி இளையராஜா கவனித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்த நிலையில் தற்போது இந்த படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. அதன்படி தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியது மட்டுமல்லாமல் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த ட்ரெய்லரின் இறுதியில் இப்படம் ஏப்ரல் 5ம் தேதி வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ