- Advertisement -
பிரபல தெலுங்கு நடிகருடன் கீர்த்தி சுரேஷ் நடிக்க மறுத்துள்ள செய்தி, இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.
மலையாளத்தில் வாரிசு நடிகையான கீர்த்தி சுரேஷ் தமிழில், இது என்ன மாயம் படத்தின் மூலம் அறிமுகமானார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக நடித்திருப்பார். இதைத் தொடர்ந்து தமிழில் ரஜினிமுருகன், ரெமோ, தொடரி, என அடுத்தடுத்து கமிட்டாகி நடிக்கத் தொடங்கினார். விஜய்யுடன் பைரவா, சூர்யாவுடன் தானா சேர்ந்த கூட்டம், விக்ரமுடன் சாமி ஸ்கொயர் என முன்னணி நடிகர்கள் அனைவருடனும் இணைந்து நடித்திருக்கிறார். தமிழ் மட்டுமன்றி தெலுங்கு மற்றும் மலையாள மொழிகளிலும் முன்னணி நடிகையாக வலம் வருகிறார் நடிகை கீர்த்தி சுரேஷ்.
