Homeசெய்திகள்சினிமாமற்றுமொரு பாலிவுட் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

மற்றுமொரு பாலிவுட் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

-

- Advertisement -

நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றுமொரு பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.மற்றுமொரு பாலிவுட் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!

நடிகை கீர்த்தி சுரேஷ் தற்போது தமிழ், மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். தமிழில் இவர், விஜய், தனுஷ், சிவகார்த்திகேயன், விக்ரம் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளார். அந்த வகையில் தற்போது கண்ணி வெடி, ரிவால்வர் ரீட்டா ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் கீர்த்தி சுரேஷ். இதற்கிடையில் கீர்த்தி சுரேஷுக்கு திருமணமும் நடைபெற்றிருந்த நிலையில் திருமணத்திற்கு பின் சினிமாவில் கவனம் செலுத்த மாட்டார் என்ற தகவல் வெளியானது. ஆனால், இவர் அசோக் செல்வனுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடிக்கப் போவதாக சமீப காலமாக தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் தான் நடிகை கீர்த்தி சுரேஷ், பேபி ஜான் படத்திற்கு பிறகு மீண்டும் ஒரு பாலிவுட் படத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்படுகிறது. மற்றுமொரு பாலிவுட் படத்தில் நடிக்கும் கீர்த்தி சுரேஷ்!இந்த படமானது ரொமான்டிக் காமெடி கதைக்களத்தில் உருவாக உள்ளதாகவும் விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் எனவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் கீர்த்தி சுரேஷ் நடிக்க உள்ள புதிய படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்கள் குறித்த விவரங்களும், இயக்குனர் யார் என்பது போன்ற தகவலும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ