பிரபல நடிகர் சூர்யா சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா‘ எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூர்யாவுடன் இணைந்து திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு மற்றும் பலர் நடிக்கின்றனர்.
ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் தேவி ஸ்ரீ பிரசாத் இசையிலும் இப்படம் உருவாகி வருகிறது.300 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகி வரும் இந்த படம் 3D தொழில்நுட்பத்தில் தயாராகி வருகிறது.மேலும் இந்த படம் அடுத்த ஆண்டு இந்தியாவில் 10 மொழிகளில் வெளியாகும் என்று கூறப்படுகிறது.

வரலாற்று சரித்திர படமாக உருவாகி வரும் இப்படத்தின் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று முடிந்துள்ள நிலையில் அடுத்த கட்ட படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற உள்ளது.
இந்நிலையில் கூடுதல் தகவலாக இந்த படத்தில் கே ஜி எஃப் பட வில்லன் அவினாஷ் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. அவினாஷ் மிரட்டலான தோற்றத்தில் நடிக்க இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.