spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஎல்லா படத்தையும் அடிச்சு ஓரங்கட்டியாச்சு... சூர்யாவின் கங்குவா செய்த சாதனை!

எல்லா படத்தையும் அடிச்சு ஓரங்கட்டியாச்சு… சூர்யாவின் கங்குவா செய்த சாதனை!

-

- Advertisement -

சூர்யா நடிக்கும் கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமைகள் பெரும் தொகைக்கு விற்கபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

ரோலக்ஸ் கதாபாத்திரத்திற்கு கிடைத்த இமாலய வரவேற்பை அடுத்து சூர்யா நடிக்கும் அடுத்த படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

we-r-hiring

இந்தப் படத்தில் பாலிவுட் நடிகை திஷா பதானி, யோகி பாபு, கிங்ஸ் லீ, கோவை சரளா, ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.

கங்குவா திரைப்படம் 3டி தொழில்நுட்பத்தில் வரலாற்று சரித்திர படமாக உருவாகிறது. இந்தியாவின் 10 மொழிகளில் இந்தப் படம் வெளியாகவுள்ளது.

கங்குவா படத்தின் டைட்டில் மோஷன் போஸ்டர் வெளியாகி படத்தின் எகிறச் செய்தது. 

தற்போது கிடைத்துள்ள அப்டேட் என்னவென்றால் கங்குவா படத்தின் டிஜிட்டல் உரிமைகள் அமேசான் ப்ரைம் தளத்திடம் சுமார் 80 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தமிழ் சினிமாவில் இதுவரை எந்த ஒரு படமும் இந்தளவுக்கு வியாபாரம் செய்ததில்லை என்று படத்தின் தயாரிப்பாளர் KE ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.

படம் வெளியாகும் முன்னரே இவ்வளவு ஹைப் இருக்கிறது. சிறுத்தை சிவாவின் கடைசி படம் ‘அண்ணாத்த’ அந்தளவுக்கு வரவேற்பு பெறவில்லை என்றாலும் ‘கங்குவா’ அந்த எண்ணங்களை சுக்கு நூறாக உடைத்து வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

MUST READ