spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகை கிரண்!

பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் நடிகை கிரண்!

-

- Advertisement -

நடிகை கிரண் கடந்த 2002 ஆம் ஆண்டு விக்ரம் நடிப்பில் வெளியான ஜெமினி திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர். அதைத் தொடர்ந்து வின்னர், வில்லன், தென்னவன், அன்பே சிவம், திவான் உள்ளிட்ட படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளார். சமீபகாலமாக இவருக்கு பட வாய்ப்புகள் அதிகம் இல்லாமல் இருந்தது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பாக நடந்த பேட்டி ஒன்றில், கிரண் லியோ படத்தின் ஒரு பாடலுக்கு நடனம் ஆடி இருப்பதாக அவரை தெரிவித்து இருந்தார். இதனால் திருமலை பட கூட்டணி மீண்டும் இணைந்துள்ளது என்று சமூக வலைதளங்களில் பல செய்திகள் பகிரப்பட்டு வந்தன.

இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் நடிகை கிரண் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது.

we-r-hiring

பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வருகிறார். அந்த வகையில் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 5 சீசன்களும் நல்ல வரவேற்பு பெற்றது. தற்போது 6வது சீசன் விரைவில் தொடங்க இருக்கிறது. அதற்கான புரோமோக்களும் வெளியாகி வருகிறது. இந்த சீசனில் ஒரு வீடு இல்லை இரண்டு வீடுகள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சீசனில் வி ஜே ரக்ஷன், ஜாக்குலின், அம்மு அபிராமி, சோனியா அகர்வால் உள்ளிட்டோர் கலந்து கொள்ள இருப்பதாக கூறப்படுகிறது. நடிகை கிரணும் ஒரு போட்டியாளராக கலந்து கொள்ள இருப்பதாக சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியாகி வருகிறது.

MUST READ