கிஸ் படத்திலிருந்து புதிய அறிவிப்பு வெளியாகி உள்ளது.
கவின் நடிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் தான் கிஸ். இந்த படத்தை நடன இயக்குனர் சதீஷ் கிருஷ்ணன் இயக்கியுள்ளார். ரோமியோ பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருக்கிறது. ஜென் மார்ட்டின் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். ரொமான்டிக் காதல் கதைக்களத்தில் உருவாகி இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவடைந்து படமானது ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. அதன்படி இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதற்கிடையில் இந்த படத்தின் டீசரும், அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளன. இந்நிலையில் ஏற்கனவே இந்த படத்தின் முதல் பாடல் ஏப்ரல் 30ஆம் தேதி வெளியாகும் என படக்குழு ப்ரோமோ வீடியோவையும் வெளியிட்டிருந்தது. தற்போது அனிருத் குரலில் உருவாகியுள்ள ‘திருடி’ எனும் முதல் பாடல் இன்று (ஏப்ரல் 30) மாலை 5.04 மணி அளவில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தில் கவினுக்கு ஜோடியாக பிரீத்தி அஸ்ராணி நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து நடிகர் பிரபுவும் நடித்திருக்கிறார். இது தவிர நடிகர் கவின் வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகி வரும் மாஸ்க் எனும் திரைப்படத்திலும், , நயன்தாராவுடன் இணைந்து புதிய படத்திலும் நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.