சந்தானம் நடிப்பில் தற்போது உருவாகியிருக்கும் திரைப்படம் தான் டிடி நெக்ஸ்ட் லெவல். இந்த படத்தை பிரேம் ஆனந்த் இயக்கியுள்ளார். ஆர்யா தயாரிக்க ஆஃப்ரோ இசையமைத்திருக்கிறார். இதில் சந்தானத்துடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், செல்வராகவன், கஸ்தூரி, நிழல்கள் ரவி, மொட்ட ராஜேந்திரன், யாஷிகா, கீதிகா மற்றும் பலர் நடித்துள்ளனர். இந்த படம் நாளை (மே 16) திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த படத்திலிருந்து போஸ்டர்கள், ட்ரெய்லர் ஆகியவை அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் கிஸ்ஸா எனும் பாடலும் வெளியானது. இந்த பாடலை இடம்பெற்ற வரிகள் இந்துக்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக இருப்பதாகவும், படத்தை தடை செய்யக் கோரியும் புகார் எழுந்தது.
அதே சமயம் ஜனசேனா கட்சியினர், இந்த பாடலை நீக்க கோரியும், ரூ.100 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் எனவும் திருப்பதி தேவஸ்தான அறங்காவலர் குழு, வழக்கறிஞர் மூலம் நோட்டீஸ் அனுப்பியது. இவ்வாறு டிடி நெக்ஸ்ட் லெவல் படத்திற்கு தொடர்ந்து பல எதிர்ப்புகள் இருந்த நிலையில் படக்குழுவினர் கிஸ்ஸா பாடலை நீக்கி இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன.
- Advertisement -