spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகோழிப்பண்ணை செல்லதுரை படப்பிடிப்பு நிறைவு

கோழிப்பண்ணை செல்லதுரை படப்பிடிப்பு நிறைவு

-

- Advertisement -
சீனு ராமசாமி இயக்கும் ‘கோழிப்பண்ணை செல்லதுரை’ திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவு பெற்றது.

கோலிவுட் திரையுலகில் மாறுபட்ட திரைப்படங்களை மாறுபட்ட கதைக்களத்துடன் உருவாக்கி முன்னணி இயக்குநராக வலம் வருபவர் இயக்குநர் சீனு ராமசாமி. தென்மேற்கு பருவக்காற்று, நீர்ப்பறவை, தர்மதுரை, மாமனிதன் போன்ற படங்களை இயக்கியவர் தான் இயக்குனர் சீனு ராமசாமி. இவருடைய படங்கள் எதார்த்த நடையிலும் மண்வாசம் மற்றும் மனிதம் பேசும் படங்களாகவே இருக்கும். இவருடைய இயக்கத்தில் உருவாகி வெகு நாட்களாக ரிலீஸ் ஆகாமல் இருக்கும் திரைப்படம் “இடம் பொருள் ஏவல்“.

we-r-hiring
இதைத் தொடர்ந்து சீனு ராமசாமி இயக்கத்தில் தற்போது உருவாகி வரும் திரைப்படம் கோழிப்பண்ணை செல்லதுரை. கிராமத்து மண் சார்ந்த ஒரு கைவிடப்பட்ட கலைஞனை பற்றிய வாழ்வியல், காதல், படமாக்கப்பட்டு வருகிறது. அனைவரும் ரசிக்கும் வகையில் அதிரடி உணர்ச்சிகள் அடங்கிய திரைப்படமாக உருவாகி வருகிறது. படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் யோகி பாபு நடித்துள்ளார். ஏகன் என்ற புதுமுக நடிகர் நாயகனாக நடித்துள்ளார். மேலும், பிரிகிடா, ஐஸ்வர்யா தத்தா, தினேஷ் முத்தையா, லியோ சிவகுமார், திருச்செந்தூர் ஸ்ரீராம், சத்யா, மானஸ்வி, பவா செல்லதுரை, மற்றும் பலர் முக்கிய வேடத்தில் நடித்திருக்கின்றனர்.

இப்படத்தின் படப்பிடிப்பு தேனி, பெரியகுளம், உள்ளிட்ட பகுதிகளில் உள்ள கிராமங்களில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. இந்நிலையில், தற்போது படப்பிடிப்பு நிறைவு பெற்றுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

MUST READ