Homeசெய்திகள்சினிமாகுரங்கு பெடல் படத்தின் முதல் பாடல் வெளியீடு

குரங்கு பெடல் படத்தின் முதல் பாடல் வெளியீடு

-

குரங்கு பெடல் படத்திலிருந்து கொண்டாட்டம் எனத் தொடங்கும் முதல் பாடல் வெளியானது.

மதுபானக்கடை, வட்டம் உள்ளிட்ட படங்களை இயக்கிய கமலக்கண்ணன் அடுத்து இயக்கியிருக்கும் புதிய திரைப்படம் தான் குரங்கு பெடல். ராசி அழகப்பன் எழுதிய சைக்கிள் என்ற சிறுகதையை மையப்படுத்தி இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டு உள்ளது. காளி வெங்கட், சந்தோஷ் வேலுமுருகன், ராகவன், எம்.ஞானசேகர் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இதை பிரபல நடிகர் சிவகார்த்திகேயன் தயாரித்து உள்ளார். அத்துடன் மாண்டேஜ் பிக்சர்ஸ் சார்பில் சவிதா, சுமீ ஆகியோரும் தயாரித்து இருக்கின்றனர்.

படத்திற்கு ஜிப்ரான் இசை அமைத்துள்ளார். கடந்த 53-வது கோவா சர்வதேச திரைப்பட விழாவில் இப்படம் திரையிடப்பட்டு, பாராட்டுகளை பெற்றது. இத்திரைப்படம் வரும் மே மாதம் 3-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இப்படம் குறித்து பேசிய இயக்குநர் கமலக்கண்ணன், சைக்கிள் ஓட்டத் துடிக்கும் மகனுக்கும், அவன் தந்தைக்குமான பிணைப்பையும் பாசத்தையும் வெளிக்காட்டும் வகையில் இப்படம் உருவாகி இருக்கிறது.

இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் மற்றும் டீசர் ஏற்கனவே வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது படத்திலிருந்து முதல் பாடல் வெளியாகி இருக்கிறது. கொண்டாட்டம் எனத் தொடங்கும் இந்த பாடல், சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ