நடிகர் சிவகார்த்திகேயன், சொந்த தயாரிப்பு நிறுவனம் மூலம் பல தமிழ் படங்களை தயாரித்து வருகிறார். கனா படத்தின் மூலமாக தொடங்கப்பட்ட இந்நிறுவனம் 5-க்கும் மேற்பட்ட படங்களை அடுத்தடுத்து தயாரித்து வருகிறது. கனா, நெஞ்சமுண்டு நேர்மையுண்டு ஓடு ராஜா, வாழ், டாக்டர், டான் படங்களின் வரிசையில், உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் தான் கொட்டுக்காளி. இப்படத்தை சிவகார்த்திகேயன் தயாரிக்கிறார்.
‘கூழாங்கள்’ படத்தின் மூலம் பல்வேறு நாடுகளுக்கு சென்று சர்வதேச விருதுகளை வாங்கிய பி.எஸ் வினோத் ராஜ் இத்திரைப்படத்தை இயக்கி இருக்கிறார். விடுதலை படத்தில் கதாநாயகனாக நடித்து வரவேற்பை பெற்ற நடிகர் சூரி இத்திரைப்படத்தில் மீண்டும் நாயகனாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடியாக மலையாள நடிகை அன்னா பென் நடித்திருக்கிறார். மேலும், பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர்.
I’m very happy that our film #Kottukkaali #TheAdamantGirl has won the Special Jury Award at the Transilvania International Film Festival – @TIFFromania. This recognition means so much to me and our entire team. A huge thank you to the jury and everyone who supported us.… pic.twitter.com/3htxantOqK
— Sivakarthikeyan (@Siva_Kartikeyan) June 23, 2024