KPY பாலா ஹீரோவாக நடிக்கும் புதிய படத்தின் பூஜை புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.
விஜய் டிவியில் ஒளிபரப்பான கலக்கப்போவது யாரு என்ற நிகழ்ச்சியின் மூலம் ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர் பாலா. டைம்ங்கில் இவர் அடிக்கும் காமெடி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. அதிலிருந்து இவரை பலரும் KPY பாலா என்றுதான் அழைக்கிறார்கள். அதைத் தொடர்ந்து இவர் குக் வித் கோமாளி போன்ற நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட இவர் பல்வேறு விருது வழங்கும் நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார்.
இது தவிர பாலா, பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறார். அந்த வகையில் நடிகர் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து மாற்றம் அறக்கட்டளையின் மூலம் ஏழை எளிய மக்களுக்கு உதவி செய்து பல்வேறு தரப்பினரிடைய பாராட்டுகளைப் பெற்று வருகிறார்.
இதற்கிடையில் சில படங்களில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த பாலா தற்போது ஹீரோவாக உருவெடுத்துள்ளார். அந்த வகையில் வைபவம் நடிப்பில் வெளியான ரணம் படத்தின் இயக்குனர் ஷெரிப் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்த படத்தை ஆதிமூலம் கிரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்க விவேக் மெர்வின் இதற்கு இசை அமைக்கிறார். சமீபத்தில் இது தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகைப்படங்களும் வீடியோவும் இணையத்தில் வைரலாகி வருகின்றன.