சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் கங்குவா. இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்க ஸ்டுடியோ கிரீன் நிறுவனத்தின் சார்பில் ஞானவேல் ராஜா தயாரிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இதற்கு இசையமைத்துள்ளார். வெற்றி பழனிசாமி படத்தில் ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். இந்த படத்தில் சூர்யா தவிர திஷா பதானி, கோவை சரளா, யோகி பாபு, பாபி தியோல், நட்டி நடராஜ், கே எஸ் ரவிக்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே இந்த படத்தின் முன்னோட்ட வீடியோவும் டீசரும் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. அதைத்தொடர்ந்து சமீபத்தில் சூர்யாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் முதல் பாடலும் வெளியானது.
3D தொழில்நுட்பத்தில் மிகப் பிரம்மாண்டமாக உருவாகி இருக்கும் கங்குவா திரைப்படம் 2024 அக்டோபர் 10 அன்று உலகம் முழுவதும் திரையிடப்பட இருக்கிறது. மேலும் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகமாக தூண்டும் வகையில் சமீப காலமாக பல தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதன்படி நடிகர் கார்த்தி இந்த படத்தின் இறுதியில் சிறப்பு தோற்றத்தில் அதுவும் வில்லனாக தோன்றுவார் என்று சொல்லப்படுகிறது. அதாவது கங்குவா முதல் பாகத்தில் கார்த்தி இடம் பெறும் காட்சிகள் இரண்டாம் பாகத்தின் தொடர்ச்சியாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது.
இந்நிலையில் கே எஸ் ரவிக்குமார், கங்குவா படத்தில் தன்னுடைய கதாபாத்திரம் குறித்த சில தகவல்களை பகிர்ந்துள்ளார். அதன்படி சமீபத்தில் நடந்த பேட்டியில் அவர் கூறியதாவது, “நான் கங்குவா படத்தில் போலீஸ் கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். என்னுடைய காட்சிகள் நிகழ்கால போர்ஷனில் இடம்பெறும் பிளாஷ்பேக் போர்ஷனில் இடம்பெறாது” என்று தெரிவித்துள்ளார்.
- Advertisement -