spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாஅவங்க ரெண்டு பேரையும் வச்சு படம் பண்ண போறேன்.... கே.எஸ். ரவிக்குமார் கொடுத்த அசத்தல் அப்டேட்!

அவங்க ரெண்டு பேரையும் வச்சு படம் பண்ண போறேன்…. கே.எஸ். ரவிக்குமார் கொடுத்த அசத்தல் அப்டேட்!

-

- Advertisement -

தமிழ் சினிமாவில் பல கமர்சியல் படங்களை கொடுத்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் கே.எஸ். ரவிக்குமார். நடிப்பதிலும் ஆர்வமுடைய இவர், அடுத்தடுத்த படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார். அவங்க ரெண்டு பேரையும் வச்சு படம் பண்ண போறேன்.... கே.எஸ். ரவிக்குமார் கொடுத்த அசத்தல் அப்டேட்!இந்நிலையில் தான் இவரது இயக்கத்தில் கடந்த 1999 ஆம் ஆண்டு வெளியான ரஜினியின் படையப்பா திரைப்படம் கிட்டத்தட்ட 27 ஆண்டுகளுக்கு பிறகு ரீ-ரிலீஸ் செய்யப்பட இருக்கிறது. இது குறித்து அப்டேட்டை கே.எஸ். ரவிக்குமாரே கொடுத்து ரசிகர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளார். ஏற்கனவே சமீபகாலமாக பழைய படங்கள் மீண்டும் ரிலீஸ் செய்யப்பட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்தி வரும் நிலையில் ‘படையப்பா’ திரைப்படமும் மீண்டும் ரிலீஸாகி வசூலிலும் பட்டய கிளப்பும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இது தவிர ரசிகர்கள் கொண்டாடும் விதமாக கே.எஸ். ரவிக்குமார், புதிய அப்டேட் ஒன்றையும் கொடுத்திருக்கிறார். அதாவது ரஜினி – கமல் ஆகிய இருவரையும் வைத்து படம் இயக்க தயாராக இருப்பதாக கூறியுள்ளார் கே.எஸ். ரவிக்குமார். இவருடைய இந்த அப்டேட் படத்தின் மீதான எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் அதிகப்படுத்தி இருக்கிறது. அவங்க ரெண்டு பேரையும் வச்சு படம் பண்ண போறேன்.... கே.எஸ். ரவிக்குமார் கொடுத்த அசத்தல் அப்டேட்!ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவரையும் தனித்தனியே வைத்து படம் இயக்கிய கே.எஸ். ரவிக்குமார், இவர்களை ஒரே திரையில் காட்டினால் அந்த படம் எவ்வளவு மாஸாக இருக்கும்? என்று ரசிகர்கள் இப்பொழுதே கற்பனை செய்ய தொடங்கி விட்டார்கள். எனவே இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

we-r-hiring

இதற்கிடையில் லோகேஷ் கனகராஜும் ரஜினி – கமல் ஆகிய இருவரையும் வைத்து கேங்ஸ்டர் படம் ஒன்றை இயக்கப் போகிறார் என்று தகவல் வெளியாகி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ