கௌதம் கார்த்திக் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘கடல்’ எனும் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் கௌதம் கார்த்திக். அதைத் தொடர்ந்து இவர், வை ராஜா வை, தேவராட்டம் போன்ற பல படங்களில் நடித்து ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். மேலும் விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடனும் இணைந்து பணியாற்றியுள்ளார். அந்த வகையில் ஆர்யாவுடன் இணைந்து ‘மிஸ்டர் எக்ஸ்’ எனும் திரைப்படத்தில் நடித்துள்ளார். மேலும் ‘ரூட் – ரன்னிங் அவுட் ஆஃப் டைம்’ எனும் திரைப்படத்தையும் கைவசம் வைத்துள்ளார். இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிஸியாக நடித்து வரும் கௌதம் கார்த்திக் அடுத்ததாக புதிய படம் ஒன்றில் நடிக்க உள்ளதாக தகவல் கசிந்துள்ளது.
அதாவது இந்த படத்தை ‘டாடா’ படத்தின் இயக்குனர் கணேஷ் கே பாபு தயாரிக்கப் போவதாகவும், அவருடைய உதவியாளர் தீனா என்பவர் இயக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற டிசம்பர் மாதத்தில் தொடங்க இருக்கிறதாம். மேலும் இந்த படத்திற்கு ‘ப்ளடி பாலிட்டிக்ஸ்’ என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த தலைப்பின் மூலம் இந்த படம் அரசியல் சம்பந்தமான படமாக இருக்குமா? அல்லது வேறு ஏதேனும் வித்தியாசமான கதையாக இருக்குமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


