நடிகர் அஜித், சிம்புவுக்கு சொன்ன கதையில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
நடிகர் அஜித் தற்போது விடாமுயற்சி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்து ரிலீஸுக்கு தயாராகி வருகின்றன. அதே சமயம் நடிகர் அஜித், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் குட் பேட் அக்லி திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதன் பிறகு சிறுத்தை சிவா, பிரசாந்த் நீல் ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் கமிட் ஆகியுள்ளதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் அஜித், தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் நடிக்கப் போவதாக சொல்லப்படுகிறது.

அதாவது துல்கர் சல்மான் நடிப்பில் வெளியான கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் தேசிங்கு பெரியசாமி. இதைத்தொடர்ந்து இவர், சிம்பு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்க திட்டமிட்டு இருந்தார். அதன்படி தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்ட STR 48 படத்தினை தேசிய பெரியசாமி இயக்கப் போவதாகவும் கமல்ஹாசன் இப்படத்தை தயாரிக்கப் போவதாகவும் அறிவிப்பு வெளியானது. இப்படம் பீரியாடிக் கதைக்களத்தில் உருவாகப் போவதாகவும் சொல்லப்பட்டது.
ஆனால் ஒரு சில தவிர்க்க முடியாத காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு இதுவரை தொடங்கப்படவில்லை. மேலும் இப்படம் கைவிடப்பட்டதாகவும் சில தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. இந்நிலையில் இயக்குனர் தேசியப் பெரியசாமி, சிம்புவிடம் சொன்ன அதே கதையை அஜித்திடம் சொல்லி இருக்கிறாராம். இது தொடர்பாக பேச்சுவார்த்தை நடைபெற்ற வருவதாகவும் விரைவில் இந்த கூட்டணி இணைய வாய்ப்புள்ளதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


