‘ஏகே 64’ படம் குறித்த சூப்பர் டூப்பர் அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் மிகப்பெரிய ஸ்டார் நடிகராக வலம் வரும் அஜித் நடிப்பில் கடைசியாக ‘குட் பேட் அக்லி’ திரைப்படம் வெளியானது. ஜெனரல் ஆடியன்ஸ் மத்தியில் இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் அஜித் ரசிகர்கள் இந்த படத்தை வெகு விமர்சையாக கொண்டாடினார்கள். அதே சமயம் இந்த படத்தில் அஜித்தின் 64வது படத்தை ‘குட் பேட் அக்லி’ படத்தை இயக்கிய ஆதிக் ரவிச்சந்திரன் தான் இயக்கப் போகிறார் என்று ஹின்ட் கொடுக்கப்பட்டிருந்தது. மேலும் நடிகர் அஜித் தன்னுடைய அடுத்த படம் 2025 நவம்பர் மாதத்தில் தொடங்கும் எனவும் 2026 ஏப்ரல் அல்லது மே மாதத்தில் ரிலீஸ் ஆகும் எனவும் தெரிவித்துள்ளார். இதற்கிடையில் அஜித்தின் ‘ஏகே 64’ படம் குறித்த பல தகவல்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஏகே 64 படத்திற்கு அனிருத் இசை அமைக்க போகிறார் என்றும் இதில் மிஸ்கின், ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளார்கள் என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர இந்த படம் அனைத்து ரசிகர்களும் ரசிக்கக்கூடிய பொழுதுபோக்கு படமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எப்போது வெளியாகும் என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் ‘ஏகே 64 படத்தின்’ அதிகாரப்பூர்வ அறிவிப்பு அடுத்த இரண்டு வாரங்களுக்குள் வெளியாகும் என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஆகையினால் அஜித் ரசிகர்கள் இந்த தரமான அப்டேட்டை கொண்டாட இப்பொழுதே தயாராகி வருகிறார்கள்.