அரசன் படத்தின் ஷூட்டிங் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
சிம்புவின் 49 ஆவது படமாக உருவாகும் திரைப்படம் தான் அரசன். இந்த படத்தை தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குனர்களில் ஒருவரான வெற்றிமாறன் இயக்குகிறார். வி கிரியேஷன்ஸ் நிறுவனத்தின் சார்பில் கலைப்புலி எஸ். தாணு இந்த படத்தை தயாரிக்க அனிருத் இதற்கு இசையமைக்கிறார். முதன்முறையாக இணைந்துள்ள சிம்பு – வெற்றிமாறன் கூட்டணியின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது.
அதன்படி இந்த படமானது தனுஷின் ‘வடசென்னை’ பட யுனிவர்ஸாக உருவாகிறது என்றும் இது இரண்டு பாகங்களாக உருவாகும் என்றும் சொல்லப்படுகிறது. இது தவிர இந்த படத்தில் சிம்பு இரண்டு விதமான வேடங்களில் நடிக்கிறார். தோற்றம், உடல் மொழி, பேச்சு ஆகியவற்றில் சிம்புவை, வெற்றிமாறன் வேறொரு பரிமாணத்தில் காட்ட உள்ளார். அதை ப்ரோமோவிலும் பார்க்க முடிந்தது. மேலும் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க வைக்க சாய் பல்லவி, சமந்தா உள்ளிட்ட சில நடிகைகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சொல்லப்படுகிறது.
இதற்கிடையில் இந்த படத்திலிருந்து வெளியான வெறித்தனமான ப்ரோமாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். அதிலும் அனிருத் தரமான சம்பவம் செய்திருந்தார். எனவே படத்திலும் வேற லெவல் சம்பவம் செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பு வருகின்ற நவம்பர் 24ஆம் தேதி தொடங்க இருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மற்ற தகவல்கள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.


