அயோத்தி பட இயக்குனரின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.கடந்த 2023 ஆம் ஆண்டு சசிகுமார் நடிப்பில் அயோத்தி எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தை அறிமுக இயக்குனர் மந்திரமூர்த்தி இயக்கியிருந்தார். ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரித்திருந்தை இந்த படத்தில் ப்ரீத்தி அஸ்ராணி, புகழ், யஷ்பால் சர்மா ஆகியோர் சசிகுமாருடன் இணைந்து முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் மாபெரும் வெற்றி பெற்றது.
பல்வேறு தரப்பினர் இடையே பாராட்டுகளைப் பெற்ற இந்த படம் இன்று வரையிலும் பெரிய அளவில் பேசப்படுகிறது. இருப்பினும் இப்படத்தின் இயக்குனர் மந்திரமூர்த்தியின் அடுத்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. ஆனால் கடந்த சில வருடங்களுக்கு முன்னரே மந்திரமூர்த்தி, ராகவா லாரன்ஸ் நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாகவும், அதனை ட்ரைடண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தயாரிக்கப் போவதாகவும் சொல்லப்பட்டது. ஆனால் இந்த படம் அடுத்த கட்டத்திற்கு நகரவில்லை.
இந்நிலையில் இப்படம் தொடர்பான புதிய தகவல் கிடைத்திருக்கிறது. அதாவது மந்திரமூர்த்தி இயக்க உள்ள இந்த புதிய படமானது கேரளாவில் நடந்த உண்மை சம்பவத்தை மையமாக வைத்து எடுக்கப்பட இருக்கிறதாம். இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் அல்லது மாதவன் ஆகிய இருவர்களில் யாரேனும் ஒருவர் ஹீரோவாக நடிக்க வாய்ப்புள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -