ப்ரோ கோட் படத்தின் புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் டாப் நடிகர்களில் ஒருவராக வலம் வரும் ரவி மோகன் தற்போது தயாரிப்பாளராகவும் உருவெடுத்துள்ளார். அந்த வகையில் தனது ரவி மோகன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் சார்பில் ‘ப்ரோ கோட்’ என்ற படத்தை தானே தயாரித்து, நடிக்கப் போவதாகவும், ‘ஆன் ஆர்டினரி மேன்’ என்ற படத்தை தானே தயாரித்து, இயக்கப்போவதாகவும் அறிவித்துள்ளார். அதில் இவருடைய ‘ப்ரோ கோட்’ படத்தில் எஸ்.ஜே. சூர்யா, அர்ஜுன் அசோகன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஸ்ரீ கௌரி பிரியா, மாளவிகா மனோஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். டிக்கிலோனா, வடக்குப்பட்டி ராமசாமி ஆகிய படங்களின் இயக்குனர் கார்த்திக் யோகி இந்த படத்தை இயக்க உள்ளார். ஹர்ஷவர்தன் ராமேஸ்வர் இதன் இசையமைப்பாளராகவும் கலைச்செல்வன் சிவாஜி இதன் ஒளிப்பதிவாளராகவும் பணியாற்ற ஒப்பந்தமாகியுள்ளனர்.
இப்படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ப்ரோமோ உடன் வெளியாகி, அந்த ப்ரோமோ இணையத்தில் செம வைரலாகி வந்தது. ஆனால் அதே சமயம் இந்த படத்தின் தலைப்பிற்கு சிக்கலும் வந்துள்ளது. இது ஒரு பக்கம் இருந்தாலும், மற்றொரு பக்கம் இந்த படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும்? என ரசிகர்கள் மிகுந்த எதிர்பார்ப்புகளுடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதன்படி இந்த மாதத்தில் இதன் படப்பிடிப்பு தொடங்கும் என சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.


