spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவின் - நயன்தாரா நடிக்கும் புதிய படம்.... லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

கவின் – நயன்தாரா நடிக்கும் புதிய படம்…. லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

-

- Advertisement -

கவின் – நயன்தாரா நடிக்கும் புதிய படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.

கவின் - நயன்தாரா நடிக்கும் புதிய படம்.... லேட்டஸ்ட் அப்டேட் என்ன?

we-r-hiring

சின்னத்திரையில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரின் மூலம் ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்த கவின் தற்போது வெள்ளித்திரையிலும் அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வருகிறார். அந்த வகையில் சமீபத்தில் இவரது நடிப்பில் ‘கிஸ்’ திரைப்படம் வெளியாகி ஓரளவிற்கு நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இது தவிர மாஸ்க், கவின் 09 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார் கவின். மேலும் இவர், தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக வலம் வரும் நயன்தாராவுடன் இணைந்து புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இந்த படத்தை விஷ்ணு எடாவன் இயக்க 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோ நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. இப்படத்தில் கவின், நயன்தாராவுடன் இணைந்து ராதிகா சரத்குமார், பிரபு பாக்யராஜ், பூர்ணிமா பாக்கியராஜ் மற்றும் பலர் நடிக்கின்றனர். கவின் - நயன்தாரா நடிக்கும் புதிய படம்.... லேட்டஸ்ட் அப்டேட் என்ன? காதல் சம்பந்தமான கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி கடந்த பல மாதங்களுக்கு முன்னரே இதன் படப்பிடிப்பு தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தற்போது இதன் படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருவதாக கூடுதல் தகவல் கிடைத்துள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற தகவல்கள் வெளியாகும் என நம்பப்படுகிறது. மேலும் இந்த படத்திற்கு ஹாய் என்று தலைப்பு வைக்கப்பட்டிருப்பதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருவது குறிப்பிடத்தக்கது.

MUST READ