spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமா'KH 237' படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்!

‘KH 237’ படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்!

-

- Advertisement -

KH 237 படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.'KH 237' படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்!

தமிழ் சினிமாவின் மிகப்பெரிய நடிப்பு ஜாம்பவானாக வலம் வரும் கமல்ஹாசன் தற்போது தக் லைஃப் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் நாளை (ஜூன் 5) அன்று திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதைத்தொடர்ந்து கமல்ஹாசன், அன்பு – அறிவு மாஸ்டர்கள் இயக்கத்தில் தனது 237 வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். ஆக்சன் கலந்த கதைக்களத்தில் உருவாகும் இந்த படத்தை கமல்ஹாசன் தனது ராஜ் கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் சார்பில் தயாரிக்கிறார். அதாவது தற்காலிகமாக KH 237 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு பல மாதங்களுக்கு முன்னரே வெளியானது. கமல்ஹாசனின் 'KH 237' படத்தின் படப்பிடிப்பு குறித்த லேட்டஸ்ட் தகவல்!மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு இந்த மாதம் தொடங்கும் தக் லைஃப் படத்தின் ரிலீஸுக்கு பிறகு தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், இந்த படத்தின் படப்பிடிப்பு 2025 ஆகஸ்ட் மாதத்தில் தொடங்கும் எனவும், இதன் முதற்கட்ட படப்பிடிப்பை சத்தியமங்கலத்தில் நடத்த படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ