மணிகண்டனின் அடுத்த படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் நடிகர் மணிகண்டன் விக்ரம் வேதா, காலா ஆகிய படங்களில் துணை கதாபாத்திரங்களில் நடித்து ஜெய் பீம் படத்தின் மூலம் பெயரையும் புகழையும் பெற்றவர். அதேசமயம் இவர் குட் நைட் திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் களமிறங்கி முதல் படத்திலிருந்து பிரம்மாண்டம் வெற்றி பெற்றார். அதைத்தொடர்ந்து இவரது நடிப்பில் வெளியான லவ்வர், குடும்பஸ்தன் ஆகிய படங்களும் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. அதே சமயம் இவர் பா. ரஞ்சித்தின் வேட்டுவம் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் எனவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மணிகண்டன், இயக்குனராக மாற உள்ளார் எனவும் அவரது இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கப் போகிறார் எனவும் பல தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவி வந்தது. ஆனால் இந்த படத்தினை மணிகண்டன் தானே தயாரித்து, இயக்க உள்ளார் என புதிய தகவல் வெளிவந்துள்ளது. இதுகுறித்து விக்ரம் வேதா படத்தின் இயக்குனர் காயத்ரி சமீபத்தில் நடந்த விழா ஒன்றில் பேசியுள்ளார்.
#Manikandan‘s Next Avatar as Writer, Director & Actor🤩
Gayathri: “Manikandan is a great talent🌟. He narrated a story to us, we are going to produce the film💰. It’s a superb script👌. It will be Written, directed & Acted by himself🔥” pic.twitter.com/J0UKHkr5yh
— AmuthaBharathi (@CinemaWithAB) March 29, 2025
அதன்படி அவர், “மணிகண்டன் மிகவும் திறமையானவர். அவர் எங்களிடம் கதை ஒன்றை சொல்லி இருக்கிறார். அதை நாங்கள் தயாரிக்கப் போகிறோம். அது சூப்பரான ஸ்கிரிப்ட். மணிகண்டனே எழுதி, இயக்கி நடிக்கப் போகிறார்” என்று தெரிவித்துள்ளார்.
எனவே இனிவரும் நாட்களில் மணிகண்டன் இயக்க உள்ள புதிய படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.