ராஜமௌலி – மகேஷ் பாபுவின் ‘SSMB29’ படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.தெலுங்கு திரை உலகில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வருபவர் ராஜமௌலி. இவர் பாகுபலி 1, 2 ஆகிய படங்களை இயக்கியதன் மூலம் தமிழ் ரசிகர்களையும் வெகுவாக கவர்ந்தவர். எனவே இவருடைய அடுத்தடுத்த படங்களின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அந்த வகையில் இவர், தற்போது மகேஷ் பாபு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு தற்காலிகமாக SSMB29 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. ஆக்சன் திரில்லர் ஜானரில் உருவாகும் இந்த படத்தில் மகேஷ் பாபு உடன் இணைந்து பிரித்விராஜ், பிரியங்கா சோப்ரா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். ஸ்ரீ துர்கா ஆர்ட்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது. பிரம்மாண்ட பட்ஜெட்டில் உருவாகும் இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த பல மாதங்களாக ஒடிசா போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் 2025 நவம்பர் மாதத்தில் வெளியாகும் என தகவல் கசிந்து இருக்கிறது.
இந்த தகவல் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டி உள்ள நிலையில் தற்போது புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது. அதாவது இந்த படமானது கிட்டத்தட்ட ரூ. 1200 கோடி பட்ஜெட்டில் மிக பிரம்மாண்டமாக உருவாகி வருவதாகவும், இதனை இரண்டு பாகங்களாக வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாகவும் தெரியவந்துள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த படமானது 120 நாடுகளில் ஹாலிவுட் படங்களுக்கு இணையாக வெளியிடப்பட இருப்பதாகவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- Advertisement -