சிம்புவின் அரசன் பட ப்ரோமோ குறித்த முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த ஜூன் மாதம் வெளியான ‘தக் லைஃப்’ படத்திற்குப் பிறகு சிம்பு, வெற்றிமாறன் இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளார். சிம்புவின் 49 ஆவது படமான இந்த படத்திற்கு அரசன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. வி க்ரியேஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கப் போவதாக சொல்லப்படுகிறது. மேலும் சமந்தா அல்லது சாய்பல்லவி ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் கதாநாயகியாக நடிக்க உள்ளார் என்றும் உபேந்திரா, கிச்சா சுதீப் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் வில்லனாக நடிக்க உள்ளார் என்றும் சமீபகாலமாக பல தகவல்கள் வெளியாகி வருகின்றன. இது தவிர இந்த படம் ‘வடசென்னை’ யூனிவர்சாக உருவாக இருக்கிறது என வெற்றிமாறன் ஏற்கனவே அப்டேட் கொடுத்திருந்தார். ஆகையினால் இந்த படத்தை கொண்டாடி தீர்க்க ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக் கொண்டிருக்கின்றனர். அதே சமயம் இன்று (அக்டோபர் 16) இந்த படத்தின் ப்ரோமோ திரையரங்குகளில் வெளியாகும் எனவும் நாளை (அக்டோபர் 17) சமூக வலைதளங்களில் வெளியாகும் எனவும் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் ஏகப்பட்ட அப்டேட்டுகள் வெளிவந்து ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிடுகிறது.
அந்த வகையில் இந்த படத்தில் சிம்பு, இரண்டு விதமான தோற்றத்தில் நடிக்க உள்ளதாக சொல்லப்பட்டது. எனவே இப்படத்தின் ப்ரோமோவிலும் சிம்புவின் இரண்டு விதமான லுக்குகள் காட்டப்பட இருப்பதாகவும், ப்ரோமோவானது ஐந்தரை நிமிடங்கள் கொண்ட இரண்டு பகுதிகளாக இருக்கும் எனவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த தகவல் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை தந்ததோடு, அனிருத்தின் பின்னணி இசையும் ரசிகர்களுக்கு தரமான விருந்து படைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.