Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்தின் சூப்பர் அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிக்கும் ‘மதராஸி’ படத்தின் சூப்பர் அப்டேட்!

-

- Advertisement -

சிவகார்த்திகேயன் நடிக்கும் மதராஸி படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்தின் சூப்பர் அப்டேட்!

சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று அமரன் திரைப்படம் வெளியாகி ஏகபோக வரவேற்பை பெற்றது. அதேசமயம் சிவகார்த்திகேயன், பிரபல இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தனது 23 வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். அதன்படி ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்றது. சமீபத்தில் இலங்கையில் இதன் கிளைமாக்ஸ் காட்சிகள் படமாக்கப்பட்டது. ஏ.ஆர். முருகதாஸின் மற்ற படங்களை போல் இந்த படமும் ஆக்ஷன் கலந்த கமர்சியல் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், நடிகர் சிவகார்த்திகேயன், மதராஸி படத்தின் படப்பிடிப்பை நிறைவு செய்துள்ளார் என தகவல் கிடைத்திருக்கிறது.சிவகார்த்திகேயன் நடிக்கும் 'மதராஸி' படத்தின் சூப்பர் அப்டேட்! அதுமட்டுமில்லாமல் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ் ஏற்கனவே எடுக்கப்பட்ட காட்சிகளுக்கு பின் தயாரிப்பு பணிகளை முடித்து விட்டதால் கிளைமாக்ஸ் காட்சிகளுக்கு மட்டும் பின் தயாரிப்பு பணிகள் செய்ய வேண்டிய வேலை இருக்கிறது. எனவே இப்படமானது 2025 செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரும் முழு வீச்சில் தயாராகி வருகிறது.

மதராஸி படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மிணி வசந்த், விக்ராந்த், டான்சிங் ரோஸ் சபீர், பிஜு மேனன், வித்யூத் ஜம்வால் மற்றும் பலர் நடிக்கின்றனர். அனிருத் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ