Homeசெய்திகள்சினிமாஅட இது சிவாஜி கணேசன் பட டைட்டில் ஆச்சே.... 'SK 25' தலைப்பு குறித்த புதிய தகவல்!

அட இது சிவாஜி கணேசன் பட டைட்டில் ஆச்சே…. ‘SK 25’ தலைப்பு குறித்த புதிய தகவல்!

-

- Advertisement -

சிவகார்த்திகேயனின் SK 25 படத்தின் டைட்டில் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.அட இது சிவாஜி கணேசன் பட டைட்டில் ஆச்சே.... 'SK 25' தலைப்பு குறித்த புதிய தகவல்!

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்று கிட்டத்தட்ட ரூ. 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்தது. அதே சமயம் நடிகர் சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். மேலும் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்திலும் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். இந்த படத்திற்கு தற்காலிகமாக SK 25 என்ற தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தில் வில்லனாக ஜெயம் ரவியும் முக்கிய கதாபாத்திரத்தில் அதர்வா மற்றும் ஸ்ரீ லீலாவும் நடித்து வருகின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே சூர்யாவின் நடிப்பில் உருவாக இருந்த இந்த படத்திற்கு புறநானூறு என்று தலைப்பு வைக்கப்பட்டிருந்த நிலையில் சூர்யா விலகியதன் காரணமாக இந்த தலைப்பு மாற்றப்பட இருக்கிறது. அட இது சிவாஜி கணேசன் பட டைட்டில் ஆச்சே.... 'SK 25' தலைப்பு குறித்த புதிய தகவல்!அதாவது 1965 இல் நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து இந்த படம் உருவாகி வருவதால் இதற்கு 1965 என்று தலைப்பு வைக்க வாய்ப்புள்ளதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்தின் தலைப்பு குறித்த புதிய அப்டேட் வெளிவந்துள்ளது. அதன்படி இந்த படத்திற்கு பராசக்தி என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் 1 நிமிடம் 50 வினாடிகள் கொண்ட டைட்டில் டீசர் விரைவில் வெளியாக இருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இனிவரும் நாட்களில் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ