டூரிஸ்ட் ஃபேமிலி படத்தின் வசூல் குறித்த புதிய அப்டேட் வெளியாகியுள்ளது.
கடந்த மே 1ஆம் தேதி சசிகுமார், சிம்ரன், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், மிதுன், கமலேஷ், யோகலட்சுமி ஆகியோரின் நடிப்பில் டூரிஸ்ட் ஃபேமிலி எனும் திரைப்படம் வெளியானது. பொருளாதார கஷ்டத்தினால் இலங்கையில் இருந்து தமிழ்நாட்டுக்கு வரும் ஒரு குடும்பம் பல சிக்கல்களைத் தாண்டி புதிய வாழ்க்கையை எப்படி தொடங்குகிறது என்பதை நகைச்சுவை கலந்த எமோஷனல் கதைக்களத்தில் கொடுத்திருந்தார் அறிமுக இயக்குனர் அபிஷன் ஜீவிந்த். இந்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. ஷான் ரோல்டன் இதற்கு இசை அமைத்திருந்தார். அரவிந்த் விஸ்வநாதன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். இந்த படம் வெளியான முதல் நாளிலிருந்தே ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று நாளுக்கு நாள் வசூலையும் வாரி குவித்து வருகிறது. அந்த வகையில் மூன்றாவது வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ள இப்படம் தற்போது வரை உலக அளவில் ரூ.60 கோடி வசூல் செய்திருப்பதாக சொல்லப்படுகிறது. கோடை விடுமுறை என்பதால் இனிவரும் நாட்களிலும் இந்த படத்தின் வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ரஜினி, சிவகார்த்திகேயன் உள்ளிட்ட பல திரைப் பிரபலங்களும் படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.