வெங்கட் பிரபு – சிவகார்த்திகேயனின் புதிய படம் தொடர்பான அப்டேட் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் சென்னை 600028, சரோஜா, கோவா, மங்காத்தா ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கட் பிரபு. இவரது இயக்கத்தில் கடைசியாக தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் வெளியானது. அடுத்தது இவர், சிவகார்த்திகேயனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கப் போவதாக சொல்லப்படுகிறது. இது தொடர்பாக பிரபல நிகழ்ச்சியில் வெங்கட் பிரபுவே உறுதி செய்து இருந்தார். மேலும் இந்த படமானது பிரம்மாண்ட பட்ஜெட் படம் எனவும் ஏற்கனவே தகவல் கசிந்தது. தற்போது இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், இந்த படத்தின் முன் தயாரிப்பு பணிகள் ஏற்கனவே தொடங்கி விட்டதாகவும், இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் எனவும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமில்லாமல் இந்த படமானது டைம் டிராவல் சம்பந்தமான கதையில் உருவாகப் போவதாகவும் தகவல் பரவி வருகிறது. இனிவரும் நாட்களில் இந்த படத்தின் கதாநாயகி, மற்ற நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது மதராஸி, பராசக்தி ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.