ஜனநாயகன் படத்தின் லேட்டஸ்ட் அப்டேட் வெளியாகியுள்ளது.
விஜய் நடிப்பில் தற்போது ‘ஜனநாயகன்’ எனும் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை பிரபல இயக்குனர் ஹெச். வினோத் இயக்குகிறார். கேவிஎன் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். விஜயின் 69ஆவது படமான இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு ஆரம்பத்திலிருந்தே அதிகமாக இருந்து வருகிறது. அதன்படி இந்த படத்தில் இருந்து வெளிவரும் போஸ்டர்களும், முன்னோட்ட வீடியோவும் ரசிகர்களை உற்சாகப்படுத்தியது.
இது தவிர இந்த படத்தில் இருந்து பல அப்டேட்டுகள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் யாரும் பார்த்திராத கிளைமாக்ஸ் இந்த படத்தில் இடம்பெற்று இருப்பதாகவும், படத்தில் பல சர்ப்ரைஸ்கள் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. எனவே 2026 ஜனவரி 9ஆம் தேதி பொங்கல் தினத்தை முன்னிட்டு இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் படம் தொடர்பான புதிய அப்டேட் ஒன்று கிடைத்திருக்கிறது. அதாவது இந்த படத்தின் முதல் பாடல் இந்த ஆண்டு தீபாவளிக்கு வெளியாகும் என ஏற்கனவே தகவல் கசிந்தன.
இதன் கூடுதல் தகவல் என்னவென்றால், தனது ஒவ்வொரு படங்களிலும் விஜய் ஏதாவது ஒரு பாடலை பாடி இருப்பார். அதுபோல ‘ஜனநாயகன்’ படத்திலும் ஒரு பாடலை விஜய் பாடி உள்ளாராம். அந்த பாடலை தான் படக்குழு தீபாவளிக்கு வெளியிட திட்டமிட்டு இருப்பதாக நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. எனவே அந்த பாடல் எப்படி இருக்கும்? என்று ரசிகர்கள் இப்பொழுதே கற்பனை செய்ய தொடங்கிவிட்டார்கள்.


