spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபிரபுதேவா, ஏ ஆர் ரகுமான் காம்போவின் புதிய படம்..... லேட்டஸ்ட் அப்டேட்!

பிரபுதேவா, ஏ ஆர் ரகுமான் காம்போவின் புதிய படம்….. லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

நடிகர் பிரபுதேவா, ஏ ஆர் ரகுமான் கூட்டணியில் கடந்த 1994 இல் காதலன் திரைப்படம் வெளியானது. பிரபுதேவா, ஏ ஆர் ரகுமான் காம்போவின் புதிய படம்..... லேட்டஸ்ட் அப்டேட்!ஏ ஆர் ரஹ்மான் இசையமைத்திருந்த இந்த படத்தின் பாடல்கள் அனைத்தும் சூப்பர் டூப்பர் ஹிட். அதைத் தொடர்ந்து மிஸ்டர் ரோமியோ, மின்சார கனவு, லவ் பேர்ட்ஸ் போன்ற பிரபுதேவாவின் படங்களுக்கு ஏ ஆர் ரகுமான் தான் இசையமைத்திருந்தார். கிட்டத்தட்ட 5 படங்களில் இவர்களின் கூட்டணி இணைந்திருந்த நிலையில் வெற்றியும் கண்டது. தற்போது 25 ஆண்டுகளுக்குப் பிறகு ஏ ஆர் ரகுமான், பிரபுதேவா கூட்டணி மீண்டும் ஒரு புதிய படத்தில் இணைந்துள்ளது. 6வது முறையாக இவர்கள் இணையும் புதிய படத்திற்கு ARRPD6 என்று தற்காலிகமான தலைப்பு வைத்துள்ளனர். இது தொடர்பான அறிவிப்பு கடந்த சில தினங்களுக்கு முன்பாக வெளியானது. இந்த படத்தை என் எஸ் மனோஜ் எழுதி இயக்குகிறார். இதில் பிரபுதேவா தவிர யோகி பாபு, அர்ஜுன் அசோகன், அஜூ வர்கீஸ், சுஷ்மிதா நாயக், ரெடின் கிங்ஸ்லி, மொட்ட ராஜேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்து வருகின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு 2024 மே மாத தொடக்கத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

அதன்படி இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக படக்குழுவினருடன் நடிகர் பிரபுதேவா கேக் வெட்டி கொண்டாடியுள்ளார். இது தொடர்பான புகைப்படங்களை பிரபுதேவா தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்த்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் ரசிகர்களால் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

MUST READ