spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாரஜினி, நெல்சன் கூட்டணியின் ஜெயிலர்...... லேட்டஸ்ட் அப்டேட்!

ரஜினி, நெல்சன் கூட்டணியின் ஜெயிலர்…… லேட்டஸ்ட் அப்டேட்!

-

- Advertisement -

ரஜினி, நெல்சன் திலீப் குமார் கூட்டணியில் ஜெயிலர் திரைப்படம் உருவாகியுள்ளது. இப்படத்தில் ரஜினியுடன் இணைந்து மோகன்லால், தமன்னா, சிவராஜ்குமார், ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளனர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.
மேலும் இந்த படத்தில் ரஜினி முத்துவேல் பாண்டியன் என்ற கதாபாத்திரத்தில் ஓய்வு பெற்ற ஜெய்லராக நடித்துள்ளார். படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் ப்ரடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இதற்கிடையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் காவலா என்னும் பாடல் வெளியாகி சூப்பர் ஹிட் ஆகியுள்ளது.இந்நிலையில் இரண்டாம் சிங்கிளை விரைவில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இந்த வார கடைசியில் ஜெயிலர் படத்தின் டீசர் வெளியாகும் என்றும் ஜூலை மாத முடிவில் ஜெயிலர் படத்தின் இசை வெளியீட்டு விழா மற்றும் ட்ரெய்லர் வெளியாகும் என்றும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் தமிழ், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் இதன் டப்பிங் பணிகளும் முடிவடைந்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. எனினும் இது குறித்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.எனவே இப்படம் வருகின்ற ஆகஸ்ட் 10ஆம் தேதி திரைக்கு வருவதற்கு முழு வீச்சில் தயாராகி வருகிறது.

MUST READ