spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாசார்பட்டா பரம்பரை 2 இன்னும் வெறித்தனமா இருக்கும்… ஆர்யா கொடுத்த அப்டேட்!

சார்பட்டா பரம்பரை 2 இன்னும் வெறித்தனமா இருக்கும்… ஆர்யா கொடுத்த அப்டேட்!

-

- Advertisement -

பா ரஞ்சித் இயக்கத்தில் ஆர்யா நடிப்பில் வெளியான ‘சார்பட்டா பரம்பரை‘ கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது.
அந்தப் படத்தில் ஆர்யாவுடன் துஷாரா விஜயன்,பசுபதி, ஜான் கொக்கேன், முத்து குமார், சந்தோஷ் பிரதாப் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
இப்படத்தை கே 9 ஸ்டுடியோஸ் நிறுவனமும் நீலம் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனமும் இணைந்து தயாரித்தது. இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசை அமைத்திருந்தார்.

குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாக்கப்பட்ட இப்படம் நேரடியாக அமேசான் பிரைம் ஓடிடி-யில் வெளியானது. சார்பட்டா பரம்பரை ஆர்யாவின் சினிமா கேரியரில் முக்கிய படமாக அமைந்தது.

we-r-hiring

இந்தப் படத்தின் வெற்றிக்குப் பிறகு சார்பட்டா 2 படம் குறித்த தகவல் ஏற்கனவே வெளியாகி இருந்தது. இந்நிலையில் சமீபத்தில் கலந்துகொண்ட நேர்காணலில் “நாங்கள் சார்பட்டா பரம்பரை முதல் பாகத்தின் மூலம் மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்புகளை உருவாக்கி இருக்கிறோம். அதனால் இந்த படத்தின் பாகம் 2, அதைவிட பெரியதாக இருக்க வேண்டும்.அதற்காக பா ரஞ்சித் ஸ்கிரிப்டில் கவனமாக வேலை செய்கிறார். அவர் நிச்சயமாக சிறந்ததை வழங்குவார். முதல் பாகத்தை போலவே இரண்டாம் பாகத்திலும் என் உடலை மெருகேற்றி தீவிர பயிற்சி மேற்கொண்டு வருகிறேன். மேலும் இத்திரைப்படம் இன்னும் ஆறு முதல் ஏழு மாதங்களில் தொடங்கலாம்” என்று கூறியுள்ளார்.

MUST READ