Homeசெய்திகள்சினிமாலெஜெண்ட் சரவணனின் அடுத்த படம்..... இன்று தொடங்கும் படப்பிடிப்பு!

லெஜெண்ட் சரவணனின் அடுத்த படம்….. இன்று தொடங்கும் படப்பிடிப்பு!

-

- Advertisement -
kadalkanni

லெஜெண்ட் சரவணன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்குகிறது.லெஜெண்ட் சரவணனின் அடுத்த படம்..... இன்று தொடங்கும் படப்பிடிப்பு!

லெஜெண்ட் சரவணன் பிரபல தொழிலதிபராக மட்டுமல்லாமல் நடிகராகவும் வலம் வருகிறார். இவர் ஆரம்பத்தில் தனது தொழில் ரீதியான விளம்பர தொடர்களில் நடித்ததன் மூலம் ரசிகர்களுக்கு பரீட்சயமானவர். அதன் பின்னர் இவர் 2022-ல் வெளியான தி லெஜண்ட் என்ற படத்தின் மூலம் ஹீரோவாக களம் இறங்கினார். ஜே டி ஜெர்ரி இந்த படத்தை இயக்கியிருந்தார். இந்த படம் எதிர்பார்த்த அளவில் வெற்றியை பெறவில்லை. அதேசமயம் பலராலும் லெஜெண்ட் சரவணன் உருவ கேலி செய்யப்பட்டார். லெஜெண்ட் சரவணனின் அடுத்த படம்..... இன்று தொடங்கும் படப்பிடிப்பு!இந்நிலையில் அடுத்ததாக லெஜெண்ட் சரவணன் கொடி, காக்கி சட்டை, கருடன் உள்ளிட்ட படங்களின் மூலம் பிரபலமான இயக்குனர் துரை செந்தில்குமார் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிக்க இருக்கிறார். லெஜெண்ட் சரவணனின் அடுத்த படம்..... இன்று தொடங்கும் படப்பிடிப்பு!இது தொடர்பான தகவல்கள் ஏற்கனவே வெளியான நிலையில் இன்று இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குகிறது. இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படத்திற்காக லெஜெண்ட் சரவணன் புதிய லுக்கில் காணப்படுகிறார்.லெஜெண்ட் சரவணனின் அடுத்த படம்..... இன்று தொடங்கும் படப்பிடிப்பு! எனவே இந்த படம் லெஜெண்ட் சரவணனுக்கு பெயரையும் புகழையும் பெற்று தரும் என்று நம்பப்படுகிறது. அதேசமயம் படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் குறித்த தகவலும் இனிவரும் நாட்களில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ