spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாபழம்பெரும் மலையாள நடிகை ஆர். சுப்புலட்சுமி காலமானார்!

பழம்பெரும் மலையாள நடிகை ஆர். சுப்புலட்சுமி காலமானார்!

-

- Advertisement -

பழம்பெரும் மலையாள நடிகை நடிகை ஆர். சுப்புலட்சுமி வயது மூப்பு காரணமாக உயிரிழந்தார்.பழம்பெரும் மலையாள நடிகை ஆர். சுப்புலட்சுமி காலமானார்!

இவர் கடந்த 1951ல் இருந்து அகில இந்திய வானொலியில் பணியாற்றினார். அதன் பின் தனது 66 வயதில் வெள்ளித் திரையில் காலடி எடுத்து வைத்தார். அந்த வகையில் தொடக்கத்தில் கல்யாணராமன், ராப்பகல், பாண்டிப்பட, நந்தனம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் விண்ணைத்தாண்டி வருவாயா, பீஸ்ட், அம்மணி, ராமன் தேடிய சீதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இவர் தமிழில் சில படங்களில் மட்டுமே நடித்திருந்தாலும் மலையாளத்தில் 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து பிரபலமானவர்.  இவர் தமிழ், மலையாளம் மட்டுமல்லாமல் கன்னடம், ஆங்கிலம், இந்தி போன்ற மொழி படங்களிலும் நடித்துள்ளார். இவர் சிறந்த நடிகை மட்டுமல்லாமல் இசைக் கலைஞர், நடன கலைஞர், ஓவியர் என பன்முக திறமைகளை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.

we-r-hiring

இந்நிலையில் 87 வயது நிரம்பிய இவர் நேற்று இரவு கொச்சியில் இருக்கும் தனது வீட்டில் வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தார். ஆர்.சுப்புலட்சுமியின் மறைவிற்கு இவரின் மறைவிற்கு கேரள முதல்வர் பினராயி விஜயன் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

MUST READ