தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வரும் நடிகர் விஜய், தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ திரைப்படத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.
இந்த படத்தில் திரிஷா, சஞ்சய்தத், மன்சூர் அலிகான், கௌதம் மேனன் மற்றும் பலர் நடிக்கின்றனர். இப்படம் 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனத்தின் தயாரிப்பிலும் அனிருத் இசையிலும் உருவாகி வருகிறது.

மாஸ்டர் படத்திற்கு பிறகு விஜய், லோகேஷ் கூட்டணியில் உருவாகி வரும் இந்த லியோ படத்திற்கு ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.
இந்நிலையில் விஜயின் 49 வது பிறந்த நாளான இன்று லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இப்படத்தின் ‘நான் ரெடி’ எனும் முதல் சிங்கிள் மாலை 6:00 மணிக்கு வெளியாகும் என்று படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.
அத்துடன் திரை உலக பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் பலரும் விஜய்க்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
இச்சமயம் விஜயின் பிறந்தநாள் பரிசாக, லியோ திரைப்படத்தின் 3D அனிமேஷன் டீஸர் வீடியோ ஒன்று வெளியிடப்பட்டுள்ளது.
இந்த வீடியோவில் விஜய் காரில் ஸ்டைலாக அமர்ந்து வர ஒரு பெண் காரை ஓட்டுகிறார். இவர்கள் இருவரும் முன்னால் செல்லும் ஒரு கும்பலின் காரை துரத்துகின்றனர். அதன் பின் விஜய் காரில் இருந்தபடியே அந்த கும்பலை துப்பாக்கியினால் சுடுகிறார். இறுதியில் 10க்கும் மேற்பட்ட கார்கள் விஜய்யின் காரை சுற்றி வளைக்கிறது. விஜய் காரில் இருந்து இறங்கி காரின் ஒரு பகுதியில் இருந்து வால் ஒன்றை கையில் எடுக்கிறார். அந்த வாலை கையில் எழுதிய படி ‘BLOODY SWEET’ என்று கூறுகிறார். இவ்வாறாக இந்த வீடியோ 3.30 வினாடிகள் நீண்டுள்ளது.
எதிர்பாராத வகையில் வெளியிடப்பட்டுள்ள இந்த அனிமேஷன் வீடியோவை மேடி மாதவ் என்ற வி எஃப் எக்ஸ் கலைஞர் ஒருவர் தயார் செய்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டு ‘விஜய் அண்ணா இது உங்களுக்காக’ என்று பதிவிட்டுள்ளார்.
இதனை லியோ படத்தின் தயாரிப்பு நிறுவனம் உட்பட பலரும் பாராட்டி வருகின்றனர். மேலும் விஜய் ரசிகர்களும் இந்த வீடியோவை சமூக வலைதளங்களில் வைரலாக்கி கொண்டாடி வருகின்றனர்.