விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தில் விஜய்யுடன் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மேத்யூ தாமஸ் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.
மாஸ்டர் படத்தின் மாபெரும் வெற்றிக்கு பிறகு லோகேஷ், விஜய் கூட்டணியில் இப்படம் வெளிவர இருப்பதால் ஆரம்பத்தில் இருந்தே ரசிகர்களுக்கு இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு பெரிய அளவில் இருந்து வருகிறது.
அதுமட்டுமில்லாமல் லியோ படம் சம்பந்தமான பல தகவல்கள் அடிக்கடி சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது. ஒவ்வொரு அப்டேட்டுகளையும் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருந்து அதனை கொண்டாடி வருகின்றனர்.
அந்த வகையில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22-ல் லியோ படத்தின் முதல் சிங்கிள் ‘நான் ரெடி’ பாடல் வெளியாகும் என்று சமீபத்தில் படக்குழு அறிவித்திருந்தது. அதன்படி நேற்று இந்தப் பாடலின் ப்ரோமோ காட்சிகளை படக்குழு வெளியிட்டது.


இந்த இன்ப அதிர்ச்சியை ரசிகர்கள் கொண்டாடி முடிப்பதற்குள் தற்போது ஒரு புதிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
அந்த அப்டேட் என்னவென்றால், விஜயின் பிறந்த நாளான ஜூன் 22 நள்ளிரவு 12 மணி அளவில் லியோ திரைப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்படும் என்று படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
இந்த தகவல் ரசிகர்களுக்கு மிகப்பெரிய ட்ரீட்டாக அமைந்துள்ளது.