spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாதேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாத.... விஜய் குரலில் லியோ படத்தின் முதல் பாடல் ப்ரோமோ!

தேள் கொடுக்கு சிங்கத்த சீண்டாத…. விஜய் குரலில் லியோ படத்தின் முதல் பாடல் ப்ரோமோ!

-

- Advertisement -

லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் லியோ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜயுடன் சஞ்சய்தத், திரிஷா, ஆக்சன் கிங் அர்ஜுன், மன்சூர் அலிகான், மேத்யூ தாமஸ், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது.
மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு லோகேஷ் விஜய் கூட்டணியில் இப்படம் வெளிவர இருப்பதால் ரசிகர்களிடம் ஆரம்பத்தில் இருந்தே மிகப் பெரிய எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. எனவே அனைத்து சினிமா ரசிகர்களும் படத்தில் ஒவ்வொரு அப்டேட்டுகளையும் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் விஜய்யின் பிறந்த நாளான ஜூன் 22 இல் லியோ படத்தின் அப்டேட்டுகள் வெளிவரும் என்று ரசிகர்களை எதிர்பார்த்து காத்திருந்தனர். அதன்படி இப்படத்தின் முதல் சிங்கிள் ‘நான் ரெடி’ பாடல் அந்நாளில் வெளியாகும் என்று படக்குழு சமீபத்தில் அறிவித்திருந்தது. அதற்கு இன்னும் ஒரு நாளே இருக்கும் நிலையில் தற்போது ‘நான் ரெடி’ பாடலின் ப்ரோமோ வெளியாகி உள்ளது.
விஜய் பாடியுள்ள இந்த பாடலின் ப்ரோமோ வெளியான ஒரு மணி நேரத்திற்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது.

விஜய் ஏற்கனவே நடிப்பது தவிர பாடல்கள் பாடுவதிலும் ஆர்வம் உடையவர்.

we-r-hiring

துப்பாக்கி படத்தில் கூகுள் கூகுள், தலைவா படத்தில் வாங்கண்ணா வணக்கங்கண்ணா, ஜில்லா படத்தில் கண்டாங்கி கண்டாங்கி, பிகில் படத்தில் வெறித்தனம், மாஸ்டர் படத்தில் குட்டி ஸ்டோரி, வாரிசு படத்தில் ரஞ்சிதமே உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார்.

இவர் பாடிய பெரும்பாலான பாடல்கள் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. விஜய்யின் நடிப்புக்கு மட்டுமல்லாமல், அவரின் குரலுக்கும் தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

தற்போது இவர் மிகப் பிரம்மாண்டமாகவும் மிகுந்த எதிர்பார்ப்புடனும் உருவாகி வரும் லியோ படத்தில் விஜய் பாடியுள்ள ‘நான் ரெடி’ பாடலின் ப்ரோமோ வெளியாகி இருப்பது ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

MUST READ