Homeசெய்திகள்சினிமா'லியோ' ஆக்சன் கிங் அர்ஜுனின் கிளிம்ப்ஸ் குறித்த அப்டேட்!

‘லியோ’ ஆக்சன் கிங் அர்ஜுனின் கிளிம்ப்ஸ் குறித்த அப்டேட்!

-

லியோ படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.

லியோ திரைப்படமானது விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகியுள்ளது. மாஸ்டர் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு இந்த கூட்டணி இணைந்துள்ளதால் ஆரம்பத்தில் இருந்தே படத்தின் மீதான எதிர்பார்ப்புகள் அதிகமாகவே இருந்து வருகிறது.

மேலும் இந்த படம் சம்பந்தமாக வெளிவரும் அடுத்தடுத்த அப்டேட்டுகளை ரசிகர்கள் வெகு விமர்சையாக கொண்டாடி வருகின்றனர்.அந்த வகையில் சமீபத்தில் வெளியான விஜய் ஃபர்ஸ்ட் லுக், சஞ்சய் தத் ஃபர்ஸ்ட் லுக், நா ரெடி பாடல் முதலானவை ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு அனிருத் இசை அமைத்துள்ளார்.

இதில் விஜய் உடன் இணைந்து அர்ஜுன், சஞ்சய்தத், திரிஷா, மன்சூர் அலிகான், கௌதம் வாசுதேவ் மேனன் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடிக்கின்றது. மேலும் இப்ப படம் வருகின்ற அக்டோபர் 19ஆம் தேதி திரைக்கு வர இருக்கிறது.

இந்நிலையில் ஆக்ஷன் கிங் அர்ஜுனின் பிறந்த நாளான இன்று அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவிக்கும் விதமாக லியோ படக்குழுவினர் அர்ஜுனின் கிளிமிப்ஸ் வீடியோவை இன்று மாலை 5 மணி அளவில் வெளியிடுகின்றனர்.  இந்த படத்தில் அர்ஜுன் ஹரோல்ட் தாஸ் என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் என்பது தெரிய வந்துள்ளது.

MUST READ