விஜய் பிறந்தநாள் ஸ்பெஷல் ஆக லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
மாஸ்டர் படத்தை அடுத்து விஜய், லோகேஷ் கனகராஜ் கூட்டணி இரண்டாவது முறையாக லியோ படத்தில் கூட்டணி அமைந்துள்ளனர். இந்தப் படத்தில் திரிஷா, சஞ்சய் தத், மிஷ்கின், மன்சூர் அலிகான், கௌதம் மேனன், மேத்யூ தாமஸ் உள்ளிட்ட பலரும் நடித்து வருகின்றனர்.
இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். 7 ஸ்க்ரீன் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரித்து வருகின்றனர்.
லியோ படத்தின் அப்டேட்க்காக ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
விஜய்யின் பிறந்த நாளை முன்னிட்டு ஏற்கனவே ‘நான் ரெடி’ பாடல் முன்னோட்டம் வெளியானது. அதையடுத்து தற்போது லியோ படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது. அதில் விஜய் ஆக்ரோஷமாக கர்ஜிக்க போஸ்டரில் கழுதைப் புலியும் இடம் பெற்றுள்ளது.
மேலும் போஸ்டரில் “கட்டுக்கடங்காத நதிகளின் உலகில் அது அமைதியான புனித கடவுளாகவும் மாறும் இல்லை கொடூர சாத்தனாக மாறும் என்ற வாசகமும் இடம் பெற்றுள்ளது.” இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை மேலும் அதிகரித்துள்ளது.
- Advertisement -