spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாமுஃபஸா தி லயன் கிங்... வெளியானது அதிரடி டிரைலர்...

முஃபஸா தி லயன் கிங்… வெளியானது அதிரடி டிரைலர்…

-

- Advertisement -
தி லயன் கிங் பட வரிசையில் முஃபஸா தி லயன் கிங் படத்தின் டிரைலர் வெளியாகி டிரெண்டாகி வருகிறது.

தமிழில் ஹாலிவுட் படங்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைப்பது வழக்கமாகும். அதிலும் குறிப்பாக குழந்தைகள் அனிமேஷன் மற்றும் விலங்குகள் சார்ந்த ஹாலிவுட் படங்களை விரும்பிப் பார்ப்பது உண்டு. அந்த வகையில் ஹாலிவுட்டில் வெளியாகி ஒட்டுமொத்த உலகம் முழுவதும் குட்டி சுட்டீஸை கவர்ந்த திரைப்படம் தி லயன் கிங். தொடக்கத்தில் அனிமேஷன் மற்றும் கார்ட்டூன் வடிவத்தில் வெளியான இந்த திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. 30 ஆண்டுகளுக்கு முன்னர் 1994-ம் ஆண்டு தி லயங்க கிங் அனுமேஷன் வெளியானது. இத்திரைப்படம் சுமார் 2 ஆஸ்கர் விருதுகளை வென்றது.

we-r-hiring
இதைத் தொடர்ந்து கடந்த 2019-ம் ஆண்டு லைவ் ஆக்‌ஷன் திரைப்படமாக தி லயன் கிங் திரைப்படம் வெளியானது. இப்படம் உலக அளவில் நல்ல வரவேற்பை பெற்றது. வசூல் ரீதியாவும் படம் வெற்றி பெற்றது. இப்படத்தில் முஃபஸா, சிம்பா, ஆகிய கதாபாத்திரங்கள் மிகவும் பிரபலம். முஃபஸா அப்பா சிங்கம் வேடத்திலும், சிம்பா மகன் சிங்கம் வேடத்திலும் நடித்திருக்கும். தற்போது முஃபஸா கதாபாத்திரம் குறித்து விரிவாக பேசும் வகையில் புதிய திரைப்படம் உருவாகி உள்ளது. இப்படத்திற்கு முஃபஸா தி லயன் கிங் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், முஃபஸா தி லயன் கிங் படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. இத்திரைப்படம் வரும் டிசம்பர் மாதம் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாகிறது.

MUST READ