Homeசெய்திகள்சினிமாலோகேஷ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்தின் முக்கிய அப்டேட்!

லோகேஷ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் ‘பென்ஸ்’ படத்தின் முக்கிய அப்டேட்!

-

- Advertisement -

லோகேஷ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் பென்ஸ் படத்தின் முக்கிய அப்டேட் வெளியாகியுள்ளது.லோகேஷ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்தின் முக்கிய அப்டேட்!

தமிழ் சினிமாவில் ட்ரெண்டிங் இயக்குனராக வலம் வரும் லோகேஷ் கனகராஜ், கைதி, மாஸ்டர், விக்ரம், லியோ ஆகிய படங்களை இயக்கி ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார். தற்போது இவர் கூலி திரைப்படத்தையும் இயக்கி முடித்துள்ளார். இதற்கிடையில் தயாரிப்பாளராக உருவெடுத்த லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் சார்பில் அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். அந்த வகையில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் பாக்கியராஜ் கண்ணன் இயக்கும் பென்ஸ் படத்தை தயாரிக்கிறார் லோகேஷ். இந்த படம் மனதில் லோகேஷின் எல்சியுவில் இணைந்திருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் உடன் இணைந்து பிரியங்கா மோகன், நிவின் பாலி, மாதவன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிப்பதாக சொல்லப்படுகிறது. ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாகவில்லை. லோகேஷ் தயாரிப்பில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் 'பென்ஸ்' படத்தின் முக்கிய அப்டேட்!இது தவிர இந்த படத்திற்கு சாய் அபியங்கர் இசையமைக்க உள்ளார் எனவும் தகவல் வெளியாகி வருகின்றன. இவ்வாறு இப்படம் தொடர்பாக வெளியாகும் அடுத்தடுத்த அப்டேட்டுகள் ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி வரும் நிலையில் இன்று (மே 12) இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கி இருப்பதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. விரைவில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ