spot_imgspot_imgspot_imgspot_img
Homeசெய்திகள்சினிமாகவின் சூப்பராக நடித்திருக்கிறார்.... 'ப்ளடி பெக்கர்' படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

கவின் சூப்பராக நடித்திருக்கிறார்…. ‘ப்ளடி பெக்கர்’ படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

இயக்குனர் லோகேஷ் கனகராஜ், கவின் நடிப்பில் வெளியான ப்ளடி பெக்கர் திரைப்படத்தை பாராட்டியுள்ளார்.கவின் சூப்பராக நடித்திருக்கிறார்.... 'ப்ளடி பெக்கர்' படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!

நடிகர் கவின் நடிப்பில் உருவாகி இருந்த ப்ளடி பெக்கர் திரைப்படம் கடந்த அக்டோபர் 31ஆம் தேதி தீபாவளி தினத்தை முன்னிட்டு திரைக்கு கொண்டுவரப்பட்டது. இந்த படத்தை ஜெயிலர் படத்தை இயக்குனர் நெல்சன் திலீப் குமார் தனது பிலாமென்ட் பிக்சர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரித்திருந்தார். அவரிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த சிவபாலன் இந்த படத்தை இயக்கியிருந்தார். மேலும் இந்த படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைக்க சுஜித் சாரங் படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனித்திருந்தார். டார்க் காமெடி – த்ரில்லர் ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் தொடர்ந்து பாசிட்டிவ்வான விமர்சனங்களை பெற்று வருகிறது. அதேசமயம் பல்வேறு தரப்பினரிடையே பாராட்டுகளையும் பெற்று வருகிறது. அந்த வகையில் பிரபல இயக்குனர்கள் லோகேஷ் கனகராஜ், ப்ளடி பெக்கர் திரைப்படத்தையும் படக்குழுவினரையும் பாராட்டியுள்ளார். கவின் சூப்பராக நடித்திருக்கிறார்.... 'ப்ளடி பெக்கர்' படத்தை பாராட்டிய லோகேஷ் கனகராஜ்!அதன்படி அவர் கூறியதாவது, “இந்த படம் நன்றாக ஒர்க் அவுட் ஆகி இருக்கிறது. நான் ஆங்கிலத்தில் இதுபோன்ற பல படங்களை பார்த்திருக்கிறேன். நெல்சன் தயாரிப்பாளராக மாறியதற்கு அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். இந்த படத்தில் கவின் சூப்பராக நடித்திருந்தார். எமோஷனல் காட்சிகளிலும் மிக எளிமையாக நடித்திருந்தார்” என்று தெரிவித்துள்ளார் லோகேஷ்.

MUST READ