Homeசெய்திகள்சினிமாதவெக கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய விஜய்..... வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!

தவெக கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய விஜய்….. வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!

-

- Advertisement -

நடிகர் விஜய் தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக வலம் வருகிறார். அதே சமயம் இவர் தனது அரசியல் பிரவேசத்தையும் தொடங்கியுள்ளதாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தார். தவெக கட்சிக்கொடியை அறிமுகப்படுத்திய விஜய்..... வாழ்த்து தெரிவித்த லோகேஷ் கனகராஜ்!அதன்படி தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கி அதன் மூலம் 2026 சட்டமன்ற தேர்தலில் தான் போட்டியிட இருப்பதாக அறிவித்துள்ளார். ரசிகர்களும், திரை பிரபலங்களும் விஜயின் அரசியல் வருகைக்கு தங்களை ஆதரவுகளை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் விஜய் இன்று (ஆகஸ்ட் 22) தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியினையும் அதன் பாடலையும் வெளியிட்டுள்ளார். அந்தக் கொடியின் இருபுறமும் போர் யானைகள் நிற்க நடுவில் வாகை மலர் இடம்பெற்றுள்ளது. சிவப்பு மற்றும் மஞ்சள் நிறத்தில் அந்த கொடி இருக்கிறது.

தமிழக வெற்றிக் கழகத்தின் கொடி பாடலில் “தமிழன் கொடி ஏறுது மக்கள் ஆசை நிஜமாகுது” போன்ற வரிகள் இடம் பெற்றுள்ளது. இந்தப் பாடல் இணையத்தில் வைரலாகி வருவதோடு மட்டுமல்லாமல் ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தையும் தந்துள்ளது. இந்நிலையில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது சமூக வலை தள பக்கத்தில் விஜய் தனது கட்சி கொடியை அறிமுகப்படுத்தியதற்காக வாழ்த்து தெரிவித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய், மாஸ்டர் லியோன் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ